துணிவு படத்தில் இணைந்தது குறித்து ஜிப்ரான் வெளியிட்ட பதிவு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:13 IST)
நடிகர் அஜித் நடிக்கும் படத்துக்கு துணிவு என டைட்டில் அறிவிக்கபட்டு, முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போஸ்டரில் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர் “உங்கள் வாழ்த்துகளுடனும் கடவுளின் ஆசியுடனும்” எனக் கூறி துணிவு படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். முதல் முறையாக ஜிப்ரான் அஜித் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக வலிமை படத்தின் பின்னணி இசைப் பணிகளை ஜிப்ரான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments