இந்தி வெப் சீரிஸில் உத்தம வில்லன் இசை காப்பி – அதிர்ச்சியான ஜிப்ரான்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (10:58 IST)
இசையமைப்பாளர் ஜிப்ரான் உத்தம வில்லன் படத்துக்கு உருவாக்கிய இசையை இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழில் வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதன் பின்னர் நய்யாண்டி, அறம்,  விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் உத்தம வில்லன் படத்துக்காக அவர் அமைத்த தீம் மியுசிக் ரசிகர்கள் இடையே பிரபலம். இந்நிலையில் அந்த இசையை இந்தியில் உள்ள வெப் சீரிஸ் ஒன்றில் அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதை ஜிப்ரானிடம் சுட்டிக்காட்டி ரசிகர் ஒருவர் வீடியோவை அனுப்ப இந்த செய்தி தனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளதாக ஜிப்ரான் புலம்பியுள்ளார். சமீபகாலமாக இதுபோல அனுமதி இல்லாமல் இசையை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டு விஸ்வாசம் படத்துக்காக இமான் அமைத்த இசையை அனுமதி இன்றி ஒரு இந்தி படக்குழு எடுத்து கையாண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments