Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலசந்தருக்கு மரியாதையுடன் அமர்க்களமாக நடந்த உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டுவிழா

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (10:47 IST)
நேற்று கமலின் உத்தம வில்லன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடந்தது. விழாவினை நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் முதலாவதாக பாலசந்தர் கமல் குறித்து பேசியதும், கமல் தனது குருநாதர் பாலசந்தர் குறித்து பேசியதும் ஒளிபரப்பப்பட்டது. உத்தம வில்லன் படத்தில் பாலசந்தர் ஏற்று நடித்த கதாபாத்திரம் குறித்து அவர் பேசியவையும் ஒளிபரப்பப்பட்டது.
 
விழாவில் படத்தின் நாயகி பூஜா குமாரின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கமல் படங்களின் பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோர் படத்தில் பணியாற்றியது குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 
 
படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி பேசுகையில், உத்தம வில்லனை தயாரித்ததற்காக பெருமைப்படுவதாக கூறினார். படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments