Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தில் இணைந்த கைதி பட நடிகர்…!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (08:32 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான பிரம்மாண்டமான பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் விஜய்யோடு இணைந்து ஆட உள்ளார்களாம். இந்த பாடலை தினேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது லியோ படத்தில் ஜார்ஜ் மரியான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய, கைதி படத்தில் நெப்போலியன் என்ற கான்ஸ்டபிளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments