‘மிஸ்டர் எக்ஸ்’ யாருனு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:40 IST)
கெளதம் மேனன் இத்தனை நாட்களாகப் பாதுகாத்துவந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ யார் என்ற விவரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்துவரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானை இந்தப் படத்துக்கு இசையமைக்க வைப்பதாக தனுஷிடம் வாக்கு கொடுத்த கெளதம் மேனன், அதை நிறைவேற்றவில்லை.

அதற்குப் பதிலாக இன்னொரு இசையமைப்பாளரை வைத்து இசையமைக்க வைத்தவர், அந்த இசையமைப்பாளர் யார் என்பதை வெளியில் சொல்லவில்லை. ‘மிஸ்டர் எக்ஸ்’ என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தார். படத்தில் இருந்து இரண்டு பாடல்களை ரிலீஸாகியுள்ளன. அதில், சித்ஸ்ரீராம் பாடிய ‘மறுவார்த்தை பேசாதே...’ பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கெளதம் மேனன். காமெடி நடிகரும், இசையமைப்பாளருமான தர்புகா ஷிவா தான் அந்த எக்ஸ். சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடா? உறுப்பினர்கள் மத்தியில் கலக்கம்!

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments