Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் மேனன் இயக்கும் அடுத்தப்படம் – மீண்டுவருவாரா ?

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (08:39 IST)
கௌதம் மேனன் இயக்கும் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகியப் படங்கள் ரிலிஸாகாமல் கிடப்பில் உள்ளன. அதேப்போல அவர் தயாரித்த நரகாசூரன் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகியப் படங்களும்  இன்னும் வெளியாகவில்லை. மற்றொரு தளமான ஜெயலலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய வெப் சீரிஸும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்படி பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள கௌதம் மேனன் இப்போது தனது அடுத்தப்படத்தை ஆரம்பிக்க இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். வருண் கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தபடத்தின் மூலமாகவாவது தனது பழைய பார்முக்கு மீண்டு வருவாரா கௌதம் மேனன் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஜுலை 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments