துருவ நட்சத்திரம் படத்தை தூசி தட்டும் கெளதம் மேனன்!

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (12:04 IST)
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் மீதமுள்ள பணிகளை தொடங்கியுள்ளார் கெளதம் மேனன்.
 
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் ஹீரோவாக நடிக்க, ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கெளதம் மேனன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்திபன், கெளதம் மேனன், சிம்ரன், சுரேஷ் சந்திரமேனன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, டிடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
பல நாடுகளிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. ஆனால், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் படமாக்காமல் இருக்கிறார் கெளதம் மேனன். பல நாட்களுக்குப் பிறகு தூசி தட்டி மறுபடியும் இந்தப் படத்தைக் கையில் எடுத்திருக்கிறார். இறுதிக்கட்டப் பணிகளுக்கான தயாரிப்பில் இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments