Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அவங்களுக்கெல்லாம் சயிண்டிஃபிக்கா சண்டை போடத் தெரியாது’… வொர்க் அவுட் ஆனதா மம்மூட்டி & கௌதம் மேனன் காம்போ!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (09:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால் இப்போது மம்மூட்டியை வைத்து ”டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டீசர் மம்மூட்டியும் கோகுல் சுரேஷும் உரையாடிக் கொள்வது போல நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி ஒரு சீனியர் டிடெக்டிவ் ஆக, கோகுல் சுரேஷுக்கு எப்படி அறிவியல்பூர்வமாக சண்டை போடனும் என சொல்வது போல உருவாக்கியுள்ளனர்.

இந்த டீசர் தற்போது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. டீசரை வைத்துப் பார்க்கும் போது ஒரு ஜாலியான டிடெக்டிவ் படமாக இருக்கும் என்பது தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments