Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

vinoth
புதன், 4 டிசம்பர் 2024 (16:41 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர்  இயக்கி வருகிறார். இந்த படத்தை மம்மூட்டியே தன்னுடைய ‘மம்மூட்டி கம்பெனி’ மூலமாக தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு “டோம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதோடு மம்மூட்டி இரவுடையோடு வீட்டில் நிற்பது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் ஒரு ஆண் பெண் உறவைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கௌதம் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படம் என்பதால் இரு மொழிகளிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments