Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ஹரஹர மஹாதேவகி

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ஹரஹர மஹாதேவகி
, திங்கள், 7 நவம்பர் 2016 (17:01 IST)
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ஹர ஹர மஹாதேவகி என்ற படத்தை நேற்று தொடங்கியுள்ளனர். அறிமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். 

 
தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் முதலிலேயே கைப்பற்றி இருக்கிறது. 
 
ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் படங்கள் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹர ஹர மஹாதேவகி இளைஞர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேஸ்புக் லைவ் ஒளிபரப்பில் கொடி, தனி ஒருவன்... திரையுலகம் அதிர்ச்சி