Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாவின் உடல் நலம் குறித்து கௌதம் கார்த்திக் விளக்கம்

அப்பாவின் உடல் நலம் குறித்து கௌதம் கார்த்திக் விளக்கம்
, திங்கள், 30 நவம்பர் 2015 (14:07 IST)
பிரபல நடிகர் கார்த்திக்கின் உடல் நலம் குறித்த விளக்கத்தை அவரது மகன் கௌதம் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 
 
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்த்திக், உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த செய்தி வெரும் வதந்தி என்றும் தனது அப்பாவின் உடல் நலம் பற்றியும் கௌதம் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் "என் அப்பா பற்றி கவலை கொண்டதற்கு நன்றி. அவர் சாதாரண பரிசோதனைக்காகத் தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு இதய கோளாறு இல்லை. இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்பா நலமாக இருக்கிறார்’ என்று அவர் கூறியுள்ளார்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil