Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பட ரிலீஸை அறிவித்த ஏ ஆர் முருகதாஸ்- கௌதம் கார்த்திக்கின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியீடு!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (08:22 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளாராம். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் வரலாற்று திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் முன்பே வெளியாகின. சில மாதங்களுக்கு முன்னர் அந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக ‘1947 ஆகஸ்ட் 16’ என சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் என்பதை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த படத்தின் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது அந்த படம் ஏப்ரல் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 30 அம் தேதி கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்த வாரமே அவரின் மற்றொரு படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments