தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த குட்டி த்ரிஷா!

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (19:47 IST)
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் மற்றும் பட்டாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்ட போது அந்த ஸ்டில்லுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அவருடன் இணைந்து உள்ளதாக கெளரி கிஷான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தனுஷின் கர்ணன் படத்தில் தான் இணைந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் திறமை மிகுந்த ஒரு இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கௌரி கிஷன் ஏற்கனவே ’96’ திரைப்படத்தில் குட்டி திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலுடன் முடிவடைந்துவிடும் என்றும் அதன்பின்னர் தனுஷ், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments