Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கானா பாலாவுக்கு இன்று பிறந்த நாள்

கானா பாலாவுக்கு இன்று பிறந்த நாள்
, வெள்ளி, 20 ஜூன் 2014 (12:50 IST)
கானா பாடல்களுக்குப் புதிய மதிப்பையும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ள கானா பாலாவுக்கு இன்று (ஜூன் 20) 45ஆவது பிறந்த நாள்.
 
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசை வகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக, கானா பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
 
அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். சூது கவ்வும் படத்தில் இவர் பாடிய "காசு பணம் துட்டு மணி மணி", இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய "என் வீட்டிலே" உள்ளிட்ட பல பாடல்களும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
 
கானா பாலாவுக்கு வெப்துனியாவின் வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil