Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… அடுத்த பாகம் பற்றி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:24 IST)
உலக அளவில் அதிக வரவேற்புப் பெற்ற வெப் சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸின் அடுத்த சீசன் உருவாகிக் கொண்டு இருப்பதாக அதன் எழுத்தாளர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டினால் எழுதப்பட்ட பிரபல நாவலான எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் சாங்-ஐ தொலைக்காட்சித் தொடருக்காக கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற பெயரில் சீரிஸாக எடுத்தனர். ஹெச் பி ஓ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற சீரிஸாக சாதனை படைத்தது.

மொத்த 8 சீசனாக ஒளிப்பரப்பான இந்த சீசன் கடந்த மாதத்தோடு முடிவடைந்தது. இந்நிலையில் இதன் முந்தையப் பாகம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆரம்பிக்கும் போது ஒருப் புரட்சிக்குப் பின்னர் ஆட்சியமைத்த 7 சாம்ராஜ்யங்களுக்குள் எழும் அதிகார வெறியை மையமாக இருந்தது. ஆனால் இப்பொது உருவாகும் முந்தையப் பாகம் புரட்சிக்கு முந்தையக் காலத்தில் இருந்த 10 சாம்ராஜ்யங்களின் கதையைப் பேசும் எனக் கூறப்படுகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸின் 10 ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டின் கேம் ஆஃப் த்ரோன்ஸின் அடுத்த பாகமான ‘தி லாங்கஸ்ட் நைட்’ விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments