Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை ஆமை என கூறிய ஜி.வி.பிரகாஷ்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

அஜித்தை ஆமை என கூறிய ஜி.வி.பிரகாஷ்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (11:12 IST)
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் பிரபல தல நடிகர் அஜித் குமார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம். தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய் போன்றோருக்கு தான். இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளமான டுவிட்டரில் அஜித்தை ஆமை என கூறியுள்ளது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் படம் ஓரளவுக்கு நல்ல வசூலையே கொடுத்து வருகிறது.


 
 
பட வாய்ப்புகள் அதிகமாக வர வர மற்ற நடிகர்களை தற்போது கலாய்க்க ஆரம்பித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். டுவிட்டரில் கண்மூடித்தனமாக தான் ஒரு பிரபலம் தன்னை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை மறந்து பதிவிடுகிறார்.


 
 
இதில் ஜி.வி.பிரகாஷ் நடிகர் அஜித்தை ஆமை என கூறும் விதமாக டுவீட் செய்துள்ளார். அதே போல நடிகர் தனுஷையும் திட்டி டிவீட் செய்தார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகி ஜி.வி.பிரகாஷூக்கு எதிராக டுவீட் செய்ய ஆரம்பிக்க தான் போட்ட டுவீட்டை நீக்கிவிட்டார். தற்போது அஜித் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷூக்கு எதிராக டுவிட்டரில் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments