Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளம்பரத்தில் சிம்பொனி இசை - ஜெர்மனி செல்கிறார் ஜீ.வி.பிரகாஷ்

விளம்பரத்தில் சிம்பொனி இசை - ஜெர்மனி செல்கிறார் ஜீ.வி.பிரகாஷ்
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (11:09 IST)
சர்வதேச சந்தையில் பிரபலமாக இருக்கும் ஒரு பொருளின் விளம்பரத்துக்கு இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விளம்பரத்துக்கு இசையமைப்பதற்காக ஜெர்மனி செல்லவிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
 
இதுபற்றி கூறிய அவர்,
 
சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் பிரபலமாக இருக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி. 
 
ஜெர்மனியில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் செல்ல உள்ளேன். இசை உலகில் பிரசித்தி பெற்றவர்கள் பலர் ஜெர்மனியில் தோன்றி உள்ளனர். இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை என்றார்.
 
இந்த விளம்பரத்திற்கு அவர் சிம்பொனி இசையை பயன்படுத்தயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil