Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளில் வெளியான ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (11:12 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் ஒரு மாதத்துக்குள்ளாக முடிந்தது. இந்த படத்தில் முதல் முதலாக ஆக்‌ஷன் கதையை தேர்வு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்போது இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமனிதன் ரிலீஸ் வேலைகளில் இப்போது சீனு ராமசாமி இருப்பதால் அந்த ரிலீஸூக்கு பின் இதன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு சீனு ராமசாமியின் முதல் படமான தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்கு இசையமைத்த என் ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார்.

வழக்கமாக மென்மையான கதைகளை தேர்வு செய்து இயக்கும் சீனு ராமசாமி இந்தமுறை கிராமத்துப் பின்னணியில் அமைந்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் படமாக இடிமுழக்கம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷுக்கும் இது ஒரு மாறுபட்ட ஆக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜி வி பிரகாஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments