Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி வி பிரகாசின் 25 ஆவது படத்தின் முதல் லுக்கை வெளியிடும் கமல்ஹாசன்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:27 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

ஜி வி பிரகாஷ், சில ஆண்டுகளுக்கு முன்னர் மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாக அந்த படம் விவாதங்களை உருவாக்கினாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதையடுத்து இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறார்.

கிங்ஸ்டன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஏற்கனவே ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவான காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் ஜி வி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படமாக உருவாகும் நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா ரிலீஸாக கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்காக ஒரு மிகப்பெரிய கப்பல் செட் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments