Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஸ்பைடர்' படப்பிடிப்பில் உதவி இயக்குனரின் கன்னத்தை கிள்ளிய மகேஷ்பாபு

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (22:15 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது.



 
 
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உதவி இயக்குனர் ஒருவரின் கன்னத்தை மகேஷ்பாபு கிள்ளிவிட்டு சிரிக்கின்றார். அதற்கு அந்த உதவி இயக்குனர் இப்படி ஒரு சான்ஸ் கிடைத்ததற்கு கோடானு கோடி நன்றி என்று கூறி அவரும் சிரிக்கின்றார். நகைச்சுவை உணர்வுடன் கூடிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வரும் இந்த படம் வரும் தசரா திருவிழாவின்போது வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரத நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர். ரஜினிகாந்த்

கிளாமர் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

டிரடிஷனல் ஆடையில் ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டேவின் போட்டோஷுட்!

ரெட்ரோ படத்தில் அந்தக் காட்சிகள் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும்.. சூர்யா நம்பிக்கை!

’குக் வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கும் தேதி: விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments