Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுஜாவை பற்றி ஆரவ்வின் கணிப்பு - ப்ரொமோ

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:07 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சுஜாவை கமல், நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்று கூறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாவிடம் கமல், உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம் என்று கூறினார்.

 
பிறகு மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார், அதை தொடர்ந்து சுஜாவிற்கு பல அதிர்ச்சி  காத்திருந்தது. இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஆரவ், சுஜா குறித்து மிகவும் மோசமாக பேசி வருகின்றார், இதையெல்லாம் சுஜா தனி அறை ஒன்றில் அமர்ந்து பார்த்து வருகின்றார்.
 
அதில் ஆரவ், வையாபுரி, ஹரிஸ் கல்யாண் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசிய ஹரிஸ் 10 பேர்ல இருந்து  திடீர்னு 5 பேர் வந்துவிட்டது. முதல்ல நான் போகப்போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியே உள்டா ஆகிவிட்டது என்றார். அதற்கு ஆரவ் நான் கணிப்புகளை வைத்து சுஜா போவாங்கனுதான் நினைத்தேன். இங்க நடப்பதை  வைத்து ஒரு கால்குலேஷன் இருக்கு என்றார்.

 
இதனை தொடர்ந்து அதற்கு பதிலளித்த ஹரிஸ் சுஜா அப்படி தப்ப எதுவும் பண்ணலையே? என்று கூறுகிறார். இதனால், சுஜா மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் பெரிய பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments