Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும்: விஷால் அறிவிப்பு

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (23:11 IST)
கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து படப்பிடிப்பு மற்றும் புதிய படங்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக விஷால் கூறியிருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது:
 
தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . 
 
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும். காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஒத்துழைப்பு மிகப்பெரியது.
 
காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments