முதல்முறையாக இணையும் கார்த்திக் மற்றும் மகன் கவுதம் கார்த்திக்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:14 IST)
கவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். `நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

 
இப்படத்தினை கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். நவம்பரில்  தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிகிறது. படத்தின் தலைப்பு வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக  இருக்கிறது.
 
இந்நிலையில் தந்தை, மகன் இணைந்து நடிக்கும் இந்தக் கதையில் இருவருடைய கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம்  இருந்ததால், கார்த்திக்குடன் நடிக்க ஒப்புக்கொண்டார் கவுதம் கார்த்திக் என கூறப்படுகிறது.
 
பொருத்தமான கதை இருந்தால் தன் தந்தை கார்த்திக்குடன் இணைந்து நடிக்கத் தயார் என்று, சில மாதங்களுக்கு முன் கவுதம்  கார்த்திக் கூறியுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறேனா?... மாளவிகா மோகனன் பதில்!

காட்சிகளில் திருப்தி அடையாத யாஷ்… ரி ஷூட்… ரிலீஸ் தேதி மீண்டும் தாமதம்?

லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர்தான்..!

சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த சென்சேஷனல் நடிகை!

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தின் மேல் கதைத் திருட்டு சர்ச்சை… இயக்குனர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments