Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாந்தனுக்கு தாலி எடுத்து கொடுத்து மனைவியிடம் திட்டு வாங்கிய நடிகர் விஜய்

சாந்தனுக்கு தாலி எடுத்து கொடுத்து மனைவியிடம் திட்டு வாங்கிய நடிகர் விஜய்
, புதன், 21 ஜூன் 2017 (11:23 IST)
சென்னை சேப்பாக்கம் பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் சாந்தனு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 
பாக்யராஜ் மகன் சாந்தனுவும் விஜய்யின் தீவிர ரசிகர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாந்தனு, இவரின் திருமணத்திற்கு விஜய்  சென்ற போது திடிரென இளையதளபதியை தாலி எடுத்து தரச்சொல்லி திருமணம் செய்து கொண்டார். இதை விஜய் தன்  மனைவி சங்கீதாவிடம் கூறிய போது அவர் கோபப்பட்டாராம். தாலியெல்லாம் வயதில் பெரியவர்கள் தான் எடுத்து தரவேண்டும்  நீங்கள் ஏன் எடுத்து தந்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதை விஜய் சாந்தனுவிடம் சொல்ல, என்னை பொறுத்தவரை பெரியவர்கள்  என்பதை விட மனதிற்கு பிடித்தவர்கள் செய்வதுதான் முக்கியம் என்று கூறினாராம் சாந்தனு. இதனை அடுத்து திருமணம்  முடிந்தபின் முதல் விருந்தையும் விஜய்தான் கொடுத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிரபுவின் அடுத்த இயக்குநர் இவர்தான்…