Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கூலுக்கு புல்லட்டில் போகும் ஜோதிகா

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (11:51 IST)
‘மகளிர் மட்டும்’ படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக்கொண்ட ஜோதிகா, குழந்தைகளை புல்லட்டிலேயே ஸ்கூலுக்கு  அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

 
 
‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார் ஜோதிகா. ‘கைனடிக் ஓட்டுவதைவிட, புல்லட் ஓட்டுவது எளிதாகத்தான் இருக்கிறது’ என்கிறார் ஜோதிகா. 
 
“ஆரம்பத்தில் சூர்யா தான் எனக்கு சொல்லித் தந்தார். அடையார் சாலையில் சில நாட்களுக்கு ஓட்டிப் பழகினேன். ஆனால், சூர்யாவுக்கு வேலை இருந்ததால், அதன்பின் பெண் பயிற்சியாளரைக் கொண்டு ஓட்டப் பழகினேன். பைக் ஓட்ட கற்றுக்கொள்ள  மூன்று நாட்கள் போதும். ஆனால், இந்த ட்ராஃபிக்கில் ஓட்டும் தன்னம்பிக்கையைப் பெற மூன்று மாதங்கள் தேவை” என்று  கூறியுள்ளார் ஜோதிகா. 
 
இப்போதெல்லாம் குழந்தைகளை புல்லட்டிலேயே ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார் ஜோதிகா. இதில், குழந்தைகளுக்கு ஏக குஷியாம். அதுவும் குறிப்பாக, பெண் குழந்தை தியாவுக்கு ரொம்பவே பெருமையாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்மேன் - ஆண்டவர் தரிசனத்துக்கு ரெடியா? நாளை ‘Thug Life’ ட்ரெய்லர்!

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments