Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருக்கு வில்லியா பூர்ணா?

Webdunia
புதன், 31 மே 2017 (12:22 IST)
சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தில், அவருக்கு வில்லியாக பூர்ணா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் இரண்டாவதாக நடித்துவரும் படம் ‘கொடிவீரன்’. ராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளில்  இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மகிமா நம்பியார், ‘ரேணிகுண்டா’ சனுஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகை பூர்ணாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
 
ஆண்கள் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் வில்லத்தன கேரக்டரில், தற்போது பெண்களும் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.  ‘சண்டகோழி 2’ படத்தில், விஷாலுக்கு வில்லியாக நடிக்கிறார் வரலட்சுமி. அதேபோல, இந்தப் படத்தில் சசிகுமாருக்கு வில்லியாக பூர்ணா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘தகராறு’ படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், வில்லத்தன  கேரக்டரில் நடித்திருந்தார் பூர்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments