Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்காக ‘பாகுபலி’ டிக்கெட்டை புக்செய்த கலெக்டர்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:24 IST)
அரசு ஊழியர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, ‘பாகுபலி-2’ படத்துக்கான டிக்கெட்டை புக் செய்து கொடுத்து  ஆச்சரியப்படுத்தியுள்ளார் கலெக்டர் ஒருவர்.

 
 
நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது ‘பாகுபலி-2’. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில், 6000  திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே, இந்தப் படத்தை முதல்நாளே காண்பதற்காக அனைவரும் ஆர்வத்துடன்  காத்திருக்கின்றனர். குறிப்பாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், ஆன்லைன் புக்கிங் முடிந்துவிட்டதால், நீண்ட  வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காத வருத்தத்தில் பலர் உள்ளனர். 
 
இந்நிலையில், அரசு ஊழியர்கள் முதல்நாளே ‘பாகுபலி’யைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக, 350 டிக்கெட்டை புக் செய்துள்ளார் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வாரங்கல் மாவட்ட கலெக்டரான அமரபலி கட்டா. இவர்கள் அனைவரும்  மாவட்டத்தின் துப்புரவப் பணியாளர்கள். ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்ற போதிலும், தன்னுடைய பணியாளர்கள் ஏசியன்  மாலில் முதல் நாள் படம் பார்த்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட்டை புக் செய்துள்ளார் கலெக்டர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான ஓணம் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய மிர்னாளினி ரவி!

க்ரீத்தி ஷெட்டியின் ஒணம் கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட் கேர்ள்’ ரசிகர்களை ஈர்த்ததா?... முதல் நாள் வசூல் விவரம்!

பெண்களை ஏமாற்றும் ஆண்களைக் கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்… ஜாய் கிரிசில்டா புலம்பல்!

அனுஷ்காவின் ‘காட்டி’ முதல் நாள் வசூல் எவ்வளவு? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments