Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய்க்கு ஜோடியான 3 ஹீரோயின்கள்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (11:07 IST)
அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

 
 
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் படம் ‘தடம்’. இதில், ஒன்றல்ல, இரண்டல்ல… 3 ஹீரோயின்கள்  அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். ‘ஃபெமினா மிஸ் இந்தியா – கல்கத்தா 2015’ பட்டம் வென்ற தன்யா, முதன்மை  நாயகியாக நடிக்கிறார். இவர், ஏற்கெனவே இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். அத்துடன், அறிமுக நாயகியான ஸ்ம்ரிதி, ‘சைவம்’ படத்தில் நடித்த வித்யா பிரதீப் இருவரும் அருண் விஜய்யைக் காதலிப்பவர்களாக நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், சில நாட்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. இரண்டாவது ஷெட்யூல், ஆகஸ்ட் 4ஆம் தேதி  தொடங்க இருக்கிறது. தொடர்ச்சியாக 30 நாட்கள் ஷூட்டிங் போகும் இந்த ஷெட்யூலில், 3 ஹீரோயின்களுமே நடிக்கின்றனர். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments