Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சி போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (13:10 IST)
வருகிற 25ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நடத்தும் மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாளப் போராட்டத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

 
 
தங்களுடைய உரிமைகளுக்காக கடந்த பல நாட்களாகப் போராடி வருகின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள். பலவிதமான வழிகளில் போராட்டம் நடத்தியும், மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய ஒருநாள் போராட்டத்தை நடத்தவுள்ளன அரசியல் கட்சிகள்.  தி.மு.க. முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில், பல்வேறு கட்சிகளும் கலந்து கொள்வதாகக் கூறியுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி  பிரச்னையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள் பலரும், அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட  முடியாமல் தற்கொலை முடிவை நாடுவது வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டியது  மத்திய – மாநில அரசுகளின் கடமை. அதை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என  கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments