ரஜினியின் கபாலி படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ்தான் கேரளாவில் வெளியிட்டுள்ளது. எட்டு கோடிகள் ரூபாய்க்கு கேரளாவின் திரையரங்கு விநியோக உரிமையை அவர் வாங்கினார். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் கபாலி வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிட மோகன்லால் திட்டமிட்டுள்ளார். முக்கியமாக மலையாளிகளின் மனம் கவர்ந்த தமிழ் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யின் 60 -வது படத்தையும் வாங்கி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் மோகன்லால்.
படங்களில் பிஸியாக நடிக்கும் போதே சைடு பிசினஸில் கொடிகட்டி பறந்தவர் மோகன்லால். ஊறுகாய் பிசினஸ் முதல் பட பிசினஸ்வரை மோகன்லால் தொட்டால் எல்லாமே லாபம்தான்.