Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலைத் தொடர்ந்து அமெரிக்கா பறந்த ரஜினி

கமலைத் தொடர்ந்து அமெரிக்கா பறந்த ரஜினி

கமலைத் தொடர்ந்து அமெரிக்கா பறந்த ரஜினி
, வெள்ளி, 27 மே 2016 (17:18 IST)
சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டுள்ளார் கமல்.

 
 
ரஜினியும் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். கமலைப் போல் படப்பிடிப்புக்காக இல்லாமல் விடுமுறைக்காக சென்றுள்ளார்.
 
ரஜினி நடித்துள்ள கபாலி ஜுலை 1 -ஆம் தேதி வெளியாகிறது. அப்படத்தின் டப்பிங் உள்பட அனைத்து வேலைகளையும் ரஜினி முடித்து கொடுத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நடித்துவரும் 2.0 படத்தின் முதல் ஷெட்யூல்டும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இரண்டாவது ஷெட்யூல்ட் தொடங்கும் முன் நன்றாக ஓய்வு எடுத்து தயாராகும் பொருட்டு கோடையை கழிக்க குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஜுன் இரண்டாவது வாரத்தில் சென்னை திரும்புகிறார்.
 
சென்னை திரும்பியதும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நம்ம ஆளு - திரை விமர்சனம்