Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

பாகுபலி-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு!!
, ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (13:27 IST)
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 

 
இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் ஜியோ மாமி 18-வது திரைப்பட விழாவில் 'பாகுபலி-2' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 
நாயகன் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். 
 
கையில் இரும்பு சங்கிலியை சுற்றிக்கொண்டு உடல் முழுவதும் லேசான காயங்களுடன் பிரபாஸ் நடந்து வர, பின்னணியில் மின்னல்களுக்கிடையே மன்னன் பாகுபலி முகம் தோன்றுவது போல வெளியான பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
 
அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சனையை கிளப்பும் எமி: கடுப்பில் சங்கர் மற்றும் ரஜினி