Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (13:15 IST)

திரையரங்குகளில் திரைப்படம் வெளியான முதல் நாளே விமர்சனங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் பல தோல்வியை சந்தித்துள்ளன. திரைப்படங்களின் சமீபத்திய தோல்விக்கு காரணம் முதல் காட்சியிலேயே திரையரங்குகளில் எடுக்கப்படும் ஆடியன்ஸ் விமர்சனங்கள்தான் என தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியதுடன், திரையரங்க வளாகங்களில் விமர்சன வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்குமாறு திரையரங்குகளுக்கு அறிக்கை அனுப்பியது.

 

மேலும் புதிய திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒரு படத்தை விமர்சிப்பது என்பது தனிநபரின் கருத்து சுதந்திரத்தை சேர்ந்தது என்பதால், அதற்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெப்சிக்கு போட்டியாக புதிய அமைப்பா? நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை..!

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

அடுத்த கட்டுரையில்
Show comments