Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்புக்கு வந்து விளக்கம் அளியுங்கள் –நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:20 IST)
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஹேமமாலினி அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவை தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி ‘விவசாயிகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போராடுகின்றனர்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு விவசாயிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‘வேளாண் சட்டங்களில் என்ன உள்ளது என்பது குறித்து பஞ்சாப்புக்கு வந்து விளக்கமளியுங்கள். பயண செலவு அனைத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments