Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மதம் சார்ந்து அல்ல மனம்சார்ந்து படம் எடுத்துள்ளேன்”… ஃபர்ஹானா படத்தின் இயக்குனர் நெல்சன் கருத்து!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (09:01 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஃபர்ஹானா’ என்று டைட்டில் வைககப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதே நிகழ்வில் பேசிய இயக்குனர் நெல்சன் “நான் புதுப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மத்தியில் வளர்ந்தவன். அதனால் நான் எடுக்கும் படத்தின் பின்னணி, நான் அனுபவித்த பின்னணியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இது மதம் சார்ந்த படமென்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதை மதம் சார்ந்து எடுக்கவில்லை, மனம் சார்ந்துதான் எடுக்க உள்ளேன். இது கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான். என் குழிவில் நான்கு பேர் இஸ்லாமியர்கள்தான். ஏனென்றால் கதையில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments