Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு எதுக்கு வைக்கனும்… பிரச்சன வந்தா எடுக்கணும் – முருகதாஸைக் கிழிக்கும் ரசிகர்கள் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (16:24 IST)
தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் சிறையில் இருந்தபடியே ஷாப்பிங் கூட செல்லலாம் என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது இது சிரி பெங்களூரு சிறையில் இருக்கும் ஆமாம் முகா தலைவர் சசிகலாவை குறிப்பிடும் விதமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இவ்வளவு பவரா என ஒருபுறம் கேள்வி எழ,  மருபுறம் முருகதாஸை கேலி செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் இது போல் இதற்கு முன்பும் சில படங்களில் முருகதாஸ் வசனங்களை வைப்பதும் பின்பு அதனை நீக்குவது என பணிந்து போயுள்ளார் என்பதுதான்.

உதாரணமாக ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு வசனம் வரவே அதற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக படத்தின் வசூல் பாதிக்கும் என அந்த வசனத்தை மியூட் செய்து பணிந்து போனார் முருகதாஸ். அதேபோல அதே படத்தில் போதிதர்மர் தமிழர் என்றும் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வெர்ஷனில் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் மாற்றி போட்டு ரசிகர்களின் பொதுபுத்தியை சுரண்டியவர் முருகதாஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments