Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல ‘வலிமை’ அப்டேட் சொல்லிட்டு போங்க! – அஜித்தை வழிமறித்த ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:51 IST)
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை யார் யாரிடமோ கேட்டு கடைசியாக அஜித்திடமே கேட்டும் விட்டார்கள் ரசிகர்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் ரசிகர்களும் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்வது, பேனர் அடிப்பது போன்றவற்றையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பைக்கிலேயே பயணம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில் கண்ட ரசிகர்கள் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் அஜித்தை கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது ரசிகர் ஒருவர் நேரடியாக அஜித்திடமே ”தல வலிமை அப்டேட் எப்போ வரும்?” என கேட்டுள்ளார். அதற்கு அஜித் சிரித்துக் கொண்டே ‘விரைவில் வரும்’ என சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments