Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராகும் ஆசையை வெளிப்படுத்திய பிரபல நடிகர் !

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (21:26 IST)
முதல்வராகும் ஆசையை வெளிப்படுத்திய ச.ம.க தலைவர் சரத்குமார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தின் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

நடிகர் சரத்குமார் முன்னாள் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தற்போது குணச்சித்திர வேடங்களில் சினிமாவில் நடித்துவருகிறார். அரசியல் மற்றும் சினிமா ஆகிய இருதுறைகளிலும் அவர் கால்பதித்துள்ளார்.

இந்நிலையில், கட்சி தொடங்கிய எல்லோருக்குமே இருக்கும் ஆசையை அவர் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் முதலமைச்சராக அமரவேண்டுமென ஆசைப்படுகிறேன். இதுகுறித்து பலமுறை கூறியுள்ளேன்.

நான் எனது 80 வயதில் அல்லது 90 வயதில் முதல்வராக ஆகலாம் அல்லது பிரதமராகலாம் என்று கூறிய அவர் வயது என்பது எண் தான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார். அவரது சித்தி முதலான தொடர்கள் சன் டிவியில் சூப்பர் அடித்துள்ளன. இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் ராதிகா சரத்குமார் நேற்று ஒரு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசும்போது, இனிமேல் சின்னத்திரையில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு, என் கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments