Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் நிதின் கோபி காலமானார்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (19:56 IST)
பிரபல கன்னட சினிமா நடிகர்  நிதின் கோபி மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

கன்னட சினிமாவில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் நிதின் கோபி. அதன்பின்னர்,  ஹலோ டாக்டர் என்ற படத்தில் டாக்டர் விஷ்ணுவர்தனுக்கு மகனாக நடித்திருந்தார்.

இதையடுத்து,  இயக்குனராகவும், தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் பங்களிப்பு செய்த ''புனர் திருமண'' சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ஹரஹர மஹாதேவ் என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், திடீர்  நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிதின் கோபியை (39 வயது)  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  சிகிச்சைக்குப் பின் பெங்களூரில்  உள்ள இட்டமடுவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென்று காலமானார்.

நடிகர்  நிதின் கோபி திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்