Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா நடித்துள்ள முதல் வெப் சீரிஸ்… டீசர் வெளியீடு!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (10:29 IST)
நடிகை சமந்தா முதல் முறையாக நடித்துள்ள வெப் சீரிஸான த பேமிலி மேன் சீசன் 2 டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்த சீரிஸ் பேமிலி மேன். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். இது சமந்தா முதன் முதலாக ஓடிடிக்காக நடிக்கும் தொடராகும். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா முதன் முதலாக இந்த சீரிஸில் கொடூரமான வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீசன் 2 ன் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை தென்னிந்தியாவிலும் பிரபலமாக்கும் விதமாக தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments