தமிழ் ரசிகர்களுக்காக டப்பிங் ஆகி வருகிறது ஆவேசம்!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (06:59 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அப்படி கடந்த மாதம் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் என்ற திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியாகி இரண்டாவது வாரத்தில் இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

பஹத் பாசில் சினிமா வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாக சாதனைப் படைத்த ஆவேஷம் தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டப்பிங் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது அது தயாராகிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments