Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவில் டூ பொள்ளாச்சி… காமெடி த்ரில்லர் பயணம் –வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் படத்தின் கதைக்களம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (09:14 IST)
மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98 ஆவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்க உள்ளார். இவர் திலீப் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான வில்லாலி வீரன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இருவரின் வாழ்வில் நடக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லிங்கான சம்பவங்களே இந்த கதை என சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments