Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பஹத் பாசில் – மீண்டும் இணையும் சூப்பர் டீலக்ஸ் கூட்டணி!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (11:33 IST)
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் பஹத் பாசில் நடித்திருந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.

தியாகராஜன் குமாரராஜா இதுவரை இயக்கியது இரண்டே படங்கள் என்றாலும் கதை சொல்லும் பாணியில் அவர் மிக முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அதில் நடித்த நடிகர்களுக்கு நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் முகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற பஹத் பாசில் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்தப் படத்திலும் தான் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments