Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எழில் இயக்கத்தில் உதயநிதி...?

எழில் இயக்கத்தில் உதயநிதி...?

எழில் இயக்கத்தில் உதயநிதி...?
, செவ்வாய், 28 ஜூன் 2016 (18:34 IST)
எழில் இயக்கத்தில் உதயநிதி ஒரு படம் தயாரித்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


 
 
சுசீந்திரன் இயக்கும் படத்தில் விஷ்ணுவுடன் நடிப்பதாக இருந்த உதயநிதி, திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார். இப்போது சுசீந்திரன் விஷ்ணுவை வைத்து மட்டும் ஒரு படத்தை தொடங்கியுள்ளார்.
 
உதயநிதி தூங்கா நகரம், சிகரம் தொடு படங்களை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 
 
இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதமே தொடங்குகிறது. அத்துடன் தேனாண்டாள் பிலிம்ஸுக்கு ஒரு படம் நடித்துத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், அடுத்து அவர் எழில் இயக்கும் படத்தை தயாரித்து நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. எழிலின் கடைசிப் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் நன்றாகப் போவதால் உதயநிதி இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - கலையரசனுக்கு பதில் அதர்வா