Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாளை தொடங்குகிறது ஐரோப்பிய திரைப்பட விழா

சென்னையில் நாளை தொடங்குகிறது ஐரோப்பிய திரைப்பட விழா
, திங்கள், 30 மார்ச் 2015 (12:58 IST)
டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கும் பிரமாண்ட சர்வதேச திரைப்பட விழாவை ஒருங்கிணைப்பது, இண்டோ சினி அப்ரிசியேஷன் என்ற அமைப்பு. இவர்கள் வருடம் முழுவதும் ஏதாவது திரைப்பட விழாக்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள். 
 
இண்டே சினி அப்ரிசியேஷன், டெல்லி ஐரோப்பிய யூனியன் மற்றும் மேக்ஸ் முல்லர் பவனுடன் இணைந்து 11 நாள் ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகிறது. நாளை - 31 - தொடங்கி ஏப்ரல் 10 -ஆம் தேதிவரை 11 தினங்கள் இந்த திரைப்பட விழா நடக்கிறது. தினம் 2 படங்கள் வீதம் 22 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.
 
சென்னை அல்லையன்ஸ் பிரான்சைஸ் ஆடிட்டோரியத்தில் இந்த திரைப்பட விழா நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil