Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மைல்கல்லை எட்டிய எதிர்நீச்சல் சீரியல்!

Webdunia
வியாழன், 18 மே 2023 (09:34 IST)
சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் படு பயங்கரமான ஹிட் அடித்துள்ளது. தொலைக்காட்சிக்கு வெளியேயும் இந்த சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராமில் எல்லாம் துணுக்குகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதற்கு இந்த சீரியலில் ஆணாக்கவாதியான குணசேகரனுக்கும்(மாரிமுத்து), அவரது குடும்பத்து பெண்களுக்கு இடையே நடக்கும் மோதல் போராட்டமே காரணமாக அமைந்துள்ளது. சீரியலின் முக்கிய வேடங்களில் கனிகா, நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்திக் இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதை சன் டிவி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சீரியலாக உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments