பொங்கல் ரேஸில் குதிக்கிறதா எதற்கும் துணிந்தவன்! சூர்யாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:53 IST)
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலிஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் காரைக்குடி படப்பிடிப்பு 51 நாட்கள் நடைபெற்றது என்பதும் அதன் பின் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளனர். இது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. குற்றாலத்தில் ஒரு சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் திரைப்படம்தான் பொங்கலுக்குதான் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை களமிறக்குகிறதாம் சன் பிக்சர்ஸ்.

ஆனால் தெலுங்கின் பிரம்மாண்டமான திரைப்படமான ஆர் ஆர் ஆர் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சூர்யாவின் படத்துக்கு திரைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.இதனால் என்ன செய்வது என்று சூர்யா குழப்பத்தில் உள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments