Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் சோபிக்காத அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’… ஓடிடி வெளியீடு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:28 IST)
அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். 

இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியோடு ஜனவரி 13 ஆம் தேதி வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்நிலையில் தற்போது ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments