Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தார்த்துக்கு சோகத்தை தந்த எனக்குள் ஒருவன்

சித்தார்த்துக்கு சோகத்தை தந்த எனக்குள் ஒருவன்
, புதன், 11 மார்ச் 2015 (10:25 IST)
கன்னட படம் லூசியாவை பார்த்து அதன் கதை, திரைக்கதையில் மனதை பறிகொடுத்து குறைந்த சம்பளத்தில் அப்படத்தின் தமிழ் ரீமேக்கான எனக்குள் ஒருவனில் நடித்தார் சித்தார்த். 
 

 

 
தமிழ்ப்பட ரசிகர்கள் பரிசோதனை முயற்சிக்கு ஆதரவு தருவார்கள் என மேடை நாகரிகத்துக்காக சொன்னாலும் இங்கே அப்படி எந்த ஆதரவும் யாருக்கும் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.
 
எனக்குள் ஒருவன் போன்ற கல்ட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே ஓரளவு ஓடும். பி சி சென்டர்களில் படம் இரண்டு நாள் தாக்குப் பிடித்தால் அதிகம். எனக்குள் ஒருவனுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. 
 
காவியத்தலைவனைத் தொடர்ந்து எனக்குள் ஒருவனும் வெற்றியை தராததால் சோகத்தில் இருக்கிறார் சித்தார்த்.

Share this Story:

Follow Webdunia tamil