Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

vinoth
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:35 IST)
மோகன்லால் நடித்த ’எம்புரான்’ திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகி எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில பாஜக நிர்வாகி விஜேஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கேரள உயர்நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘இந்த படத்தால் ஏற்பட்ட வன்முறை, காவல்துறையின் எஃப் ஐ ஆர் எதுவும் இருக்கிறதா? இது தணிக்கையால் சான்றளிக்கப்பட்ட படம்தானே?” எனப் பலக் கேள்விகளை அவரை நோக்கி எழுப்பி  இது சம்மந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறியது.

இந்நிலையில் தமிழகத்திலும் எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து சில சர்ச்சைக்குரியக் காட்சிகள் இடம்பெற அதற்கு தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது சம்மந்தமாக இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “முல்லைப் பெரியாறு பற்றி படத்தில் இடம்பெற்றக் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. சென்சாரில் நீக்கப்படவில்லை. நமது கவனத்துக்கு வந்ததால் நீக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்ஜெட் வெறும் ரூ.70 லட்சம்.. வசூலோ ரூ.70 கோடி.. திரைப்படம்ன்னா இப்படி இருக்கனும்..!

ரத்தக் காட்டேரியாக மாறும் ராஷ்மிகா!? கவனம் ஈர்க்கும் Thama Teaser!

நீல நிற சேலையில் எக்ஸ்ட்ரா அழகோடு ஜொலிக்கும் திவ்யபாரதி!

கவர்ச்சித் தூக்கலான கலர்ஃபுல் உடையில் மிளுறும் திஷா பதானி!

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களை மிஸ் செய்துவிட்டேன் – அனுபமா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments